search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் கட்டண உயர்வு"

    வாழப்பாடியில் குடிநீர் கட்டணம் மற்றும் சொத்துவரி, தொழில்வரி உயர்த்தியதை கண்டித்தும், தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #dmkdemonstration

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்கு மேட்டூர் காவிரி நதிநீரையே நம்பியுள்ளனர். மாதத்திற்கு இரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    மேட்டூர் காவிரி குடிநீருக்கு மாதந்திர குடிநீர் கட்டணமாக ரூ.72 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் இருந்து ரூ.152 ஆக குடிநிர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சொத்து வரி, தொழில்வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.

    வாழப்பாடி பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் மற்றும் சொத்துவரி, தொழில்வரி உயர்த்தியதை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டணத்தை ரத்து செய்யவும், தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், வாழப்பாடியில் தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்காடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச் செல்வன் தலைமை வகித்தார். வாழப்பாடி ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, நகர செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிர்வாகிகள் சந்திரா ராயர், கலைசெல்வி மாதேஸ்வரன், அழகரசன், தும்பல்கணேஷ், உமாபதி, குறிச்சி பெரியசாமி, ஆட்டோ சுரேஷ், தனசேகரன், மணி மற்றும் விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர்கள் முல்லை வாணன், வேல்முருகன் மற்றும் காலிக்குடங்களுடன் திரண்டு வந்த ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி, காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். #dmkdemonstration

    மோகனூர் பேரூராட்சி குடிநீர் கட்டண உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சி குடிநீர் கட்டண உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் ரூ.100 கட்டணம் செலுத்தி வந்தது ரூ.200 ஆகவும், வணிக குடிநீருக்கும் ரூ.200 செலுத்தி வந்தது ரூ.400ஆகவும் உயர்த்தியதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் செல்லவேல் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. அவைத்தலைவரும், முன்னாள் பேரூராட்சித் தலைவரும் உடையவர், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அர்ச்சுனன், மோகனூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்துசாமி மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆர்ப்பாட்டத்தை கண்டித்து முன்னால் மத்திய இணை அமைச்சரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் காந்திசெல்வன் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் இள மதி துணை அமைப்பாளர் சத்தியபாபு, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நக்கீரன் உள்பட ஏராளமான பெண்கள் அண்ணா சிலையிலிருந்து ஊர்வலமாக ஏற்றாதே ஏற்றாதே குடிநீர் கட்டணத்தை ஏற்றாதே என காலி குடங்களுடன் கோஷங்கள் எழுப்பி வந்தனர். பின்னர் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி கூறியதாவது:-

    நாங்கள் கட்டணத்தை உயர்த்தவில்லை அரசே உயர்த்தியதனால் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது. அனைத்து பேரூராட்சியிலும் கட்டணம் உயர்த்தப்பட்டது என்பது குறிப்படதக்கது. 

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×